அன்புடையீர்,
சில பல தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த வலைப்பூ இடையில் சில காலங்கள் மேம்படுத்தப்பட முடியாமல் போனது. ஆனாலும் நம் நண்பர்கள் நேரிலும், தொலைபேசியிலும், ஈமெயில் மூலமும் இந்த வலைப்பூவை தொடரச் சொல்லி அன்புக்கட்டளை இட்டார்கள். மேலும் இந்த வலைப்பூ மேம்படுத்தப்படாமல் இருந்த போதிலும் தொடர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகைபுரிந்த அன்பர்களும் இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இனிமேல் இன்ஷா அல்லாஹ் என்ன வேலையாக இருந்தாலும் சரி இனிமேல் இந்த வலைப்பூவை மேம்படுத்தி விடுகிறேன். இனி இந்த வலைப்பூ பல்சுவை இதழாக தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நண்பர்கள் இந்த வலைப்பூவிற்கு முன்னர் தந்த நல்ஆதரவை தொடர்ந்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நமது நண்பர்கள் தங்களது படைப்புகளையும் தொடர்ந்து அனுப்பி வையுங்கள். யாரையும் புண்படுத்தாமல் பொதுவான விஷயங்களாக இருக்கட்டும்.
வஸ்ஸலாம்.
என்றும் அன்புடன்,
ஜெஹபர்தீன்.