குர்ஆனின் குரல்
நம்பர் 1 இஸ்லாமிய மாத இதழ்
நமது சமுதாயத்தில் இஸ்லாமிய மாத இதழ்கள் பல வெளியாகியுள்ளது, எனினும் நீண்ட காலமாக சிறப்பாக வெளியாகி இன்று வரை நம் சமுதாய நலனில் அக்கரைக் கொண்டு சீரும் சிறப்புமாக உள்ள ஒரு சில பத்திரிகைகளில் மிக சிறப்பான இடத்தைக்கொண்டுள்ளது குர்ஆனின் குரல் மாத இதழாகும். நாம் ஏனைய தின, வார மற்றும் மாத இதழுக்குக் கொடுக்கும் ஆதரவை நம் இஸ்லாமிய பத்திரிகைகளுக்கு கொடுக்கின்றோமா? என்றால் இல்லை என்ற பதிலை நாம் அறிந்ததே ஆகும். மிக நல்ல பல இஸ்லாமிய பத்திரிகைகள்கூட நம் சமுதாய மக்களின் ஆதரவு இல்லாமல் மிகக்குறுகிய காலத்தில் பத்திரிக்கை நடத்தமுடியாமல் போனதையும் நாம் அறிந்தேயுள்ளோம்.
ஆனால் அல்லாஹ்வின் பேரருளால் 1958 வருடம் முதல் அல்லாமா அ.மு. அப்துல் ஜப்பார் பாகவி (ரஹ்) அவர்களால் நிறுவப்பட்டு இன்று மவ்லானா முஃப்தி அல்ஹாஜ் ’அஸ்அதுல் மில்லத்’ அ. முகம்மது அஷ்ரப் அலீ மன்பயீ அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் குர்ஆனின் குரல், இஸ்லாமிய பத்திரிகையாக மட்டும் அல்லாமல், இஸ்லாமிய மதரஸா, ஏழைக்குமர்களின் திருமணக் காரியங்கள் மற்ற இதர அனைத்து இஸ்லாமிய வாழ்வியல் முன்னேற்ற நிகழ்விலும் தன்னை இணைத்துக் கொண்டு நாளுக்கு நாள் வளர்ந்து உயர்ந்துக் கொண்டுள்ளது. இத்தகைய சிறப்பான நிகழ்வில் நம்முடைய பங்களிப்பாக என்ன செய்துள்ளோம்? நம்மில் எத்தனைப்பேர்களின் வீட்டில் குர்ஆனின் குரலுக்கான சந்தா இருக்கின்றது?
இன்ஷா அல்லாஹ் இனிமேலாவது நம் வீட்டில் அல்லாஹ்வின் ரஹ்மத் வர ஏற்பாடு செய்வோமாக! ஆமின். உங்கள் இல்லத்திற்கும் / இல்லப் பெண்டிருக்கும் குர்ஆனின் குரல் மாத இதழை மாதாமாதம் பெற விரைந்து ஏற்பாடு செய்யுங்கள். மூன்று வருடங்களுக்கான சந்தா B$ 12.00 மட்டுமே செலுத்துங்கள். இது ஏனைய அனைத்துப் பத்திரிகைகளையும்விட நீங்கள் செலுத்தும் இந்த தொகை மிகக் குறைவானதே ஆகும். புருனையில் வாழும் நமதூர் மற்றும் நம் சமுதாய மக்கள் சந்தா செலுத்த என்னை தொடர்புக்கொள்ளவும். இன்ஷா அல்லாஹ் இந்தியாவில் உள்ள உங்கள் வீடுகளுக்கு மாதாமாதம் குர்ஆனின் குரல் தபால் மூலம் பெற ஏற்பாடு செய்து தருகிறேன்.
இப்பதிவை வெறுமனே படித்து அடுத்தப் பதிவிற்கு செல்லாமல், இதனைப்படிக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டில் குர்ஆனின் குரல் சந்தா இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இன்ஷா அல்லாஹ் குர்ஆனின் குரலுக்கான உங்கள் குரலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றேன்.
என்றும் அன்புடன்,
ஜெஹபர்தீன்.
+6738839077