அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

லகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.

மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.

உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6738839077 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Image and video hosting by TinyPic

Monday, November 14, 2011

வருந்துகிறோம்


மதிப்பிற்குரிய நமதூர் ஜமால் Dr. பதுருதீன் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் தெரிந்தோ, தெரியாமல் செய்த பாவத்தினை மன்னித்து, அவர்களை நல்லோர்களின் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!! அன்னாரை இழந்து வாழும் நமதூர் மக்களுக்கும், அன்னாரின் குடும்பத்தார்களுக்கும் கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்தார்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, November 7, 2011

தியாகப் பெருநாளாம் இப்புனிதத் திருநாளில் தியாகத்தை உணர்ந்தவர்களுக்கும், என் இனிய எமதூரார்களுக்கும், உலகலாவிய இஸ்லாமிய நண்பர்களுக்கும் கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்தார்கள் சார்பாக இதயம் நிறைந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இப்புனித நன்னாளில் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது பாவங்களையும் மன்னித்து, அருள்புரிந்து, நம் நியாயமான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவானாக, ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!

என்றும் அன்புடன்,
ஜாஃபர்

Saturday, September 24, 2011

24/09/2011
தேர்வடக்குத்தெரு,
மரக்கடை, லெட்சுமாங்குடி.

புளியமரத்தார் அப்துல் ரெஜாக் சம்பந்தியும், M. ஹாஜா மைதீன் சகோதரர்களின் அக்காவும், முகம்மது ரபீக், முஜீபுர்ரஹ்மான் தாயாரும், A. அப்துல் அஜீஸ் மனைவியுமான வஹாப் நாச்சியா (47) மெளத்து. இன்று மாலை 5.00 மணிக்கு மரக்கடை பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Wednesday, September 21, 2011

21/09/2011
மெயின் ரோடு, கோட்டகச்சேரி.

மூங்கில்குடியார் அப்துல்லத்தீப் மகனும், மூங்கில்குடியார் தாஜுதீன், நூருல்அமீன் தகப்பனாருமான மூங்கில்குடியார் அப்துல்சலாம் (68) மௌத்து. இன்று மாலை 4:00 மணிக்கு கோட்டகச்சேரி பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Monday, September 19, 2011

19/09/2011
3-B, ஜமாலியா தெரு

சின்னமைனர் கட்டிமேட்டார் ஹமீதுசுல்தான் மகளும், கூப்பாச்சிகோட்டையார் P.S.N. அஹமது மனைவியும் கூப்பாச்சிகோட்டையார் அப்துல் சலாம், ஹலீம், மூமின், ஹாதி இவர்களின் தாயாரும் காட்டுலெப்பை ஜெஹபர்ஹுசைன் மாமியாருமான A.H. சக்கினா பீவி (75 ) மெளத்து. இன்று மாலை 5.00 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Wednesday, September 14, 2011

FRING – Very cheap calls to India

குறைந்த செலவில் இந்தியாவிற்கு பேச
நிமிடத்திற்கு 0.01¢ மட்டுமே!

VOIP & SIP Technology மூலம் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்தியாவிற்கு மிகக்குறைந்த செலவில் ( நிமிடத்திற்கு 0.01¢ மட்டுமே) உங்கள் செல்போன் மூலமாக பேச முடியும். இதற்கு கம்ப்யூட்டர் தேவையில்லை. இதற்கு தேவை 3G & GPRS Internet / wifi வசதியுள்ள செல்போன் மற்றும் Fring Software சப்போர்ட் செய்யும் நவீன வசதியுள்ள செல்போன்கள் மட்டுமே. இத்தகைய வசதி Nokia N70 வகை செல்போன் மாடல்களிலிருந்தே கிடைக்கும். இதன் மூலம் உங்கள் குடும்பத்தார்கள், சுற்றத்தார்கள் மற்றும் நண்பர்களுக்கு, நினைத்த நேரத்திலும், தேவையான நேரத்திலும் அவர்களை அழைத்துப் பேச முடியும். அழைப்புக்காக காத்திருக்க வேண்டிய அவசியமோ, கால்பேக்கிற்கான காத்திருப்போ அல்லது ப்ரிபெய்ட் கார்டுகளை வாங்கிக்கொண்டு டயல்அப் செய்யவோ தேவையில்லை.

தற்கு நீங்கள் செய்ய வேண்டியது http://www.fring.com என்ற முகவரிக்கு உங்கள் செல்போன் பிரவுசர் மூலமாக சென்று Fring சாப்ட்வேரை இலவசமாக டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளவும். பின்னர் இன்ஸ்டால் ஆன Fringன் மூலமாக Signup செய்துக் கொள்ளவும். பின்னர் Fringoutல் €10.00 மதிப்பை உங்கள் கிரடிட் கார்ட் மூலமாக டாப்அப் செய்துக் கொள்ளவும். உங்களின் தொகை டாப்அப் ஆனவுடன் Fring மூலமாக உலகின் எப்பகுதிக்கும் உள்ள நபர்களின் செல்போனுக்கோ அல்லது லேண்ட்லைனுக்கோ கால் செய்யலாம். குறிப்பாக எந்த நாட்டிலிருந்தும் நம் இந்தியாவிற்கு அழைக்க நிமிடத்திற்கு 0.01¢ மட்டுமே. இதனால் உங்கள் தொலைபேசி செலவின் மாத பட்ஜெட்டில் நிறைய தொகையை மிச்சப்படுத்தலாம். Interested? ஆர்வமுள்ளவர்கள் Fringஐ ஒருமுறை உபயோகப்படுத்திப்பாருங்கள்! தெளிவான, எக்கோ இல்லாத கால் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

உங்கள் யாருக்காவது Fring இன்ஸ்டால் செய்வது சம்பந்தமாக சந்தேகங்களோ அல்லது கிரடிட் கார்டு இல்லாதவர்கள் Fringoutல் டாப்அப் செய்ய வேண்டியிருந்தாலோ என்னை செல்போனில் +6738839077 தொடர்புக்கொள்ளவும். உங்களுக்கு தேவையான உதவியை (உங்கள் செல்போனில் Fring இன்ஸ்டால் முதல் Fringout டாப்அப் வரை) இலவசமாக செய்து தருகிறேன்.

Tuesday, September 13, 2011

குர்ஆனின் குரல்

நம்பர் 1 இஸ்லாமிய மாத இதழ்

மது சமுதாயத்தில் இஸ்லாமிய மாத இதழ்கள் பல வெளியாகியுள்ளது, எனினும் நீண்ட காலமாக சிறப்பாக வெளியாகி இன்று வரை நம் சமுதாய நலனில் அக்கரைக் கொண்டு சீரும் சிறப்புமாக உள்ள ஒரு சில பத்திரிகைகளில் மிக சிறப்பான இடத்தைக்கொண்டுள்ளது குர்ஆனின் குரல் மாத இதழாகும். நாம் ஏனைய தின, வார மற்றும் மாத இதழுக்குக் கொடுக்கும் ஆதரவை நம் இஸ்லாமிய பத்திரிகைகளுக்கு கொடுக்கின்றோமா? என்றால் இல்லை என்ற பதிலை நாம் அறிந்ததே ஆகும். மிக நல்ல பல இஸ்லாமிய பத்திரிகைகள்கூட நம் சமுதாய மக்களின் ஆதரவு இல்லாமல் மிகக்குறுகிய காலத்தில் பத்திரிக்கை நடத்தமுடியாமல் போனதையும் நாம் அறிந்தேயுள்ளோம்.

னால் அல்லாஹ்வின் பேரருளால் 1958 வருடம் முதல் அல்லாமா அ.மு. அப்துல் ஜப்பார் பாகவி (ரஹ்) அவர்களால் நிறுவப்பட்டு இன்று மவ்லானா முஃப்தி அல்ஹாஜ் அஸ்அதுல் மில்லத் அ. முகம்மது அஷ்ரப் அலீ மன்பயீ அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் குர்ஆனின் குரல், இஸ்லாமிய பத்திரிகையாக மட்டும் அல்லாமல், இஸ்லாமிய மதரஸா, ஏழைக்குமர்களின் திருமணக் காரியங்கள் மற்ற இதர அனைத்து இஸ்லாமிய வாழ்வியல் முன்னேற்ற நிகழ்விலும் தன்னை இணைத்துக் கொண்டு நாளுக்கு நாள் வளர்ந்து உயர்ந்துக் கொண்டுள்ளது. இத்தகைய சிறப்பான நிகழ்வில் நம்முடைய பங்களிப்பாக என்ன செய்துள்ளோம்? நம்மில் எத்தனைப்பேர்களின் வீட்டில் குர்ஆனின் குரலுக்கான சந்தா இருக்கின்றது?

இன்ஷா அல்லாஹ் இனிமேலாவது நம் வீட்டில் அல்லாஹ்வின் ரஹ்மத் வர ஏற்பாடு செய்வோமாக! ஆமின். உங்கள் இல்லத்திற்கும் / இல்லப் பெண்டிருக்கும் குர்ஆனின் குரல் மாத இதழை மாதாமாதம் பெற விரைந்து ஏற்பாடு செய்யுங்கள். மூன்று வருடங்களுக்கான சந்தா B$ 12.00 மட்டுமே செலுத்துங்கள். இது ஏனைய அனைத்துப் பத்திரிகைகளையும்விட நீங்கள் செலுத்தும் இந்த தொகை மிகக் குறைவானதே ஆகும். புருனையில் வாழும் நமதூர் மற்றும் நம் சமுதாய மக்கள் சந்தா செலுத்த என்னை தொடர்புக்கொள்ளவும். இன்ஷா அல்லாஹ் இந்தியாவில் உள்ள உங்கள் வீடுகளுக்கு மாதாமாதம் குர்ஆனின் குரல் தபால் மூலம் பெற ஏற்பாடு செய்து தருகிறேன்.

இப்பதிவை வெறுமனே படித்து அடுத்தப் பதிவிற்கு செல்லாமல், இதனைப்படிக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டில் குர்ஆனின் குரல் சந்தா இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இன்ஷா அல்லாஹ் குர்ஆனின் குரலுக்கான உங்கள் குரலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றேன்.

என்றும் அன்புடன்,
ஜெஹபர்தீன்.
+6738839077