அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

லகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.

மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.

உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6738839077 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Image and video hosting by TinyPic

Saturday, July 3, 2010

நித்திரைக்கு முன்...

காருண்ய நபி (ஸல்) அவர்கள் தனதருமை பிராட்டியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஓரிரவில், “நீ குர்ஆனை முடிக்காமல் படுக்க வேண்டாம், என்னையும் முந்திய நபிமார்களையும் உமக்கு ஷஃபாஅத் செய்யும்படி ஆக்காமல் படுக்க வேண்டாம், ஹஜ்ஜோ அல்லது உம்ராவோ செய்யாமல் நீ துயில் கொள்ள வேண்டாம், விசுவாசிகள் அனைவரும் உன்னை பொருந்தியிருக்கும்படி ஆக்காமல் நீ உறங்க வேண்டாம்” என்று கூறிவிட்டு தொழச்சென்று விட்டார்கள். அண்ணலார் தொழுது முடித்து வந்ததும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், “யா ரசூலுல்லாஹ்! இவையனைத்தையும் இந்நேரத்தில் செய்வதற்கு சக்தி பெற்றவராக இல்லையே” என்றனர். இதனைக் கேட்ட அண்ணலார் புன்முறுவல் செய்தவர்களாக, “சூரா அல்இக்லாஸை நீ ஓதினால் குர்ஆனை முடித்ததாக ஆகிவிடுகிறாய், எம் மீதும் முந்தைய நபிமார்கள் மீதும் நீ ஸலவாத்து கூறினால் எங்களை ஷஃபாஅத் செய்யக் கூடியவர்களாக நீ ஆக்கிவிட்டாய், சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹீ வல்லாஹீ அக்பர் என்று கூறினால் ஹஜ் அல்லது உம்ரா செய்த்ததாகி விடுகின்றாய், விசுவாசிகளுக்குப் பிழை பொருக்கத் தேடுவாயானால் அவர்கள் அனைவரும் உன் மீது பொருத்தம் கொள்ளக் கூடியவர்களாக ஆக்கிவிட்டாய்” என்று நவின்றனர். மிக எளிதான இந்த அமல்களின் மூலம் இம்மாபெரும் பாக்கியங்களை அடைவோமாக!