அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

லகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.

மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.

உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6738839077 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Image and video hosting by TinyPic

Thursday, August 13, 2009

மெளத்து செய்திகள்

13/08/2009
30, இஸ்மாயில் தெரு

ஜெயில்லாதி ஹசன் முகம்மது மகனும், திருத்துறைப்பூண்டியார் முகம்மது ஷரீபு மருமகனும், ஜெயில்லாதி ஹாஜா சகாபுதீன், ஹசன் மைதீன் தகப்பனாரும், திட்டச்சேரியார் பஷீர் அகமது மாமனாரும், மாவூரார் அஹமது பாட்சா அப்பாவுமான ஜெயில்லாதி ஹாஜி அப்துல் ஜப்பார் (வயது 93) மெளத்து. இன்று காலை 10.30 மணிக்கு பெரிப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.