அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

லகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.

மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.

உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6738839077 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Image and video hosting by TinyPic

Wednesday, May 6, 2009

Swine Flu - ஒரு விளக்கம்...

ன்று மிகவேகமாக பரவி உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்சல் (Swine flu) எனப்படும் ஸ்வைன் ப்ளூயென்ஸா (Swine fluenza) மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு வைரஸாக இன்று விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் அதிகமான பன்றிப்பண்ணைகள் ஐரோப்பிய நாடுகளிலேயே காணப்படுகின்றன பன்றி இறைச்சி அதிகமாக ஐரோப்பிய நாடுகளில் உண்ணப்படுவதோடு உணவுக்காகவே இந்தப் பன்றிப் பண்ணைகள் நிறுவகிக்கப்பட்டு வருகின்றன. திடீரேன தோன்றி படுவேகத்தில் பரவும் இத்தகைய வைரசுகள் பன்றிகளில் இருந்து மனிதனுக்குப் பரவுவதால் பன்றிக் காய்ச்சல் எனப் பெயர் பெறுகிறது. பன்றிக்கு பிக் தவிர ஹாக்ஸ்இ ஸ்வைன் எனவும் பெயர்கள் உண்டு எனவே ஸ்வைன் ப்ளூ (Swine flu) என ஆங்கிலத்தில் கூறப்படுவதால் பன்றிக் காய்ச்சல் என தமிழில் கூறப்படுவதாகவும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த காய்ச்சலைப் பரப்பி வருவது Orthomyxoviridae என்ற ரகத்தைச் சேர்ந்த வைரஸாகும் (Swine fluenza virus- SIV) பன்றிகளுக்குள் புகுந்துவிட்டால் அதன் சுவாசப்பாதையில் பயணிப்பதனூடாக சுவாசத்தை மட்டுப்படுத்தி பன்றிகளை கொன்றுவிடும். இந்த வைரஸில் பல வகைகள் (Strains) விஞ்ஞானிகளால் இனம் காணப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் தன்மைகள் தற்போது கண்டரியப்பட்டுள்ளன ஆர்.என்.ஏ.(R.N.A) வை அடிப்படையாகக் கொண்ட இந்த வைரசுகளின் ப்ளஸ் பாயின்ட் அவை தங்கள் உருவை (Mutate) மாற்றிக்கொள்ளக் கூடியது. ஆகவே மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவும்போது மனிதனின் உடலிலுள்ள தற்காப்பு முறைமையை (Immune System) இது வென்றுவிடுவதால் மனிதன் இதனால் பாதிக்கப்பட்டு இறந்துவிடும் அபாயமும் உண்டு.

அதுமட்டுமல்லாமல் அது மனிதனுக்குள் புகுந்துவிட்டால் மனித உடலில் பல்கிப்பெருகி மனித சூவாசத்தினூடாக மற்றவரையும் தொற்றிக்கொள்ளக் கூடியது இந்த வைரஸ் இதற்கு H1N1 எனப் பெயரிட்டுள்ளனர். ஆகவே ஐரோப்பிய அமெரிக்க மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகளில் வாழும் நமது மக்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற காய்ச்சல் (flu) வகை உலக சரித்திரத்தில் பலமுறை கண்டறியப்பட்டுள்ளது. 1957ம் ஆண்டு (Asian Flu) ஆசியக் காய்ச்சல் என்ற ஒன்று நாற்பதைந்து மில்லியன் அமெரிக்கர்களை பாதித்து அதில் எழுபதுனாயிரம் பேர்வரை இறந்து போனார்கள். அதன் பதினொரு வருங்களின் பின்னர் 1968 ஆண்டு தொடக்கம் 1969ம் ஆண்டு காலப்பகுதியில் ஹோங்கோங் காய்ச்சல் (HongKong flu) ஐம்பது மில்லியன் அமெரிக்கர்களை பாதித்து அதில் முற்பத்தி மூவாயிரம்பேர் இறந்தார்கள். 1976ம் ஆண்டு அமெரிக்க படைவீரர்கள் ஐநூறுபேர் பன்றிக் காய்ச்சலால் (wine flu) சில வாரங்கள் பீடிக்கப்பட்டார்கள் என்றாலும் சில மாதங்களின் பின்னால் இந்த நோய் மாயமாக மறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியதுடன் இந்நோய் மீண்டும் தொன்றுவதற்கு எந்த அறிகுரியையும் காணமுடியவில்லை என்று கூறியிருந்தனர்.

உலகம் முழுவதும் பல இலட்ச்சம் மக்களை இந்தக் காய்ச்சல் தொற்றிக்கொள்ளும் அபாயமிருப்பதால் அனைவரும் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த எஸ்.ஐ.வி.(SIV) வைரஸ் வகை இரண்டு பிரவுகளாக காணப்படுகிறது இன்ப்ளூயென்ஸா சி (Influenzavirus C) அல்லது அதன் மற்றொரு உபபிரிவான இன்ப்ளூயென்ஸா ஏ (Influenzavirus A) என்பனவாகும் அவை.

இஸ்லாத்தில் பன்றிகள் வளர்ப்பதற்கோ அல்லது பராமரிப்பதற்கோ அல்லது புசிப்பதற்கோ வலுவான தடைகள் போடப்பட்டுள்ளதால் இஸ்லாமியர்கள் எப்போதும் இதைத் தவிர்த்தே வருகின்றனர்.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, குளிர்காய்ச்சல், தொண்டைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். கவனக்குறைவாக இருப்பவர்களுக்கு இது உயிராபத்தை ஏற்படுத்தவல்லது.

இவ்வகை வைரசுகளை கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் பல இருந்தபோதும் இதை முன்கூட்டியே தடுக்கக்கூடிய தடுப்பு மருந்துகள் இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் தற்காப்பு நடவடிக்கைகள் மூலம் இதை தடுத்துக் கொள்ளலாம் நோய் காணப்படுகின்ற நாடுகளில் வாழ்பவர்கள் வாய்,மூக்கு பகுதிகளை மூடிக்கொள்ளுதல்,குப்பைகள் சேராமல் சூழலை சுத்தமாக வைத்திருத்தல்,நோயினால் பாதிக்கப்பட்டவர் இருமல் வரும் போது வாயில் துணியை வைத்து மறைத்துக் கொள்ளுதல்,நோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வருவர்கள் தங்கள் வாய், கண்,மூக்குப் பகுதிகளை கையினால் தொடாதிருத்தல்,கைகளை சவர்காரம் இட்டு நன்றாக்க் கழுவிக் கொள்ளுதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளால் நோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

உலகில் தற்போதுள்ள முன்னனி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த வைரசுக்கான தடுப்புசியை தயாரிப்பதில் இரவு பகலாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவிப்போம்.