அன்புடையீர்,
நடைபெற இருக்கும் பாரளுமன்ற தேர்தலில் (13/05/2009) கூத்தாநல்லூர் மக்கள் யாவரும் தத்தம் ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அரசியல் கட்சிகளின் மேல் மோகம் கொண்டு நம்மூர் மக்கள் வாக்களிக்காமல், தேர்தலில் நிற்கும் வேட்பாளர், அவர்தம் தகுதிகள், அவர் நம்மூருக்கு/ நம் சமுதாய மக்களுக்காக என்ன செய்தார்? செய்வார்? என்பதை ஆராய்ந்து ஓட்டளிக்கவும்.
ஒரு முக்கிய எச்சரிக்கை, நீங்கள் தவிர்க்கும் ஒவ்வொரு ஓட்டும் உங்கள் எதிரிகள் பெறும் ஒரு ஓட்டாகிவிடும் என்பதை உணர்ந்து தவறாமல் வாக்களிக்குமாறு கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்தார்கள் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
உலகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.
மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.
உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6738839077 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
