இன்ஷா அல்லாஹ் நமது கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தல் நடைபெற உள்ளதை நாம் எல்லோரும் அறிவோம். அத்தேர்தல் நல்ல முறையில் நடைபெற கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்தார்கள் சார்பாக எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். பாரமபரியமிக்க நமது ஊரின் கண்ணியத்தையும், புகழையும் காக்க புதிதாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பாடுபட வேண்டும் என்பதையும் இங்கு கேட்டுக் கொள்கிறோம்.
நமது ஜமாஅத்தார்கள் தமது கடமையை உணர்ந்து நமது உரிமைக்கும், ஒற்றுமைக்கும் பாடுபடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
ஜமாஅத் தேர்தலில் பங்கு பெறும் வேட்பாளர்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் பெயர் நமதூர் ஜமாஅத் பட்டியளில் உள்ளதா என்பதை அறிய இங்கே கிளிக் செய்து டவுன்லோடு செய்துக் கொள்ளவும்.
உலகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.
மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.
உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6738839077 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
