கூத்தாநல்லூர் வாசிகளின் நலனுக்காக, எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நல்ல காரியங்களை முன்வைத்துச் செல்ல, எங்களின் சிறிய கருத்துக்களை இங்கு முன் வைக்கிறோம். இதில் எந்தவித மாறுபட்ட கருத்துக்களுக்கும் இடமளிக்காமல் நம் ஊர் மக்களின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டு ஒவ்வொருவரும் கடமையும், பொறுப்பும் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
கூத்தாநல்லூர் நலத்திட்டங்களாக முன் வைப்பது...
1. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்தல்.
2. வசதியில்லாத ஏழைக் குடும்பத்தாருக்கு மருத்துவ செலவுகளுக்கு உதவுதல்.
3. வசதியில்லாத பெண்களின் திருமணங்களுக்கு உதவுதல்.
புரூனேயில் செயல் திட்டங்கள்...
1. வேலையில்லாமல் சிரமப்படுவோருக்கு உதவுதல்.
2. விபத்து, நோய்வாய்ப்படுதல், இறப்பு போன்ற பிரச்னைகளுக்கு உதவுதல்.
3. ஊர் செய்திகளை (மெளத்து, திருமணம் மற்றும் முக்கியமானவைகள்) ஒருவருக்கொருவர் உடனுக்குடன் அறிவித்தல்.
4. கூத்தாநல்லூர் வெப்சைட் ஆரம்பித்தல்.
தாங்கள் அனைவரும் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து எங்களின் திட்டங்களை நல்லமுறையில் நடைமுறைப்படுத்த உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் நம் காரியங்கள் அனைத்திற்கும் துணை நிற்பானாக! ஆமீன்.