30/08/2009
33, அன்வரியா தெரு
அவுக்கூர் முஹம்மது காசிம், ஜபருல்லா மருமகனும், S.H.அப்துல் சலாம் மகனும், P.M.A.சீனிமுஹம்மது, P.M.A.சீனிஜெகபர் சாதிக் சகோதரியின் மகனும், S.H.A.முஹம்மது இஸ்மாயில், S.H.A.இம்ரான் பரீத் சகோதரரும், அவுக்கூர் ரைஸ்முகம்மது, அஜ்மல்கான் மச்சானுமான S.H. நூர் முகம்மது (வயது 33) மௌத்து. இன்று இரவு 8.00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.
உலகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.
மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.
உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6738839077 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
