அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்லாஹ்வின் கிருபையால் எங்களின் செயற்குழு கூட்டத்தில் பின்வருமாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நமதூர் மக்களுக்கு கூத்தாநல்லூர் புருனே ஜமாஅத்தார்கள் மூலம் மாததிற்கு ஒரு முறை ரூ2,000/- உதவித்தொகை வழங்குவது என்றும் அத்தொகையை ரொக்கமாகக் கொடுக்காமல், குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 15 குடும்பம் வீதம் குடும்பத்திற்கு ரூ2000/- வீதம் 4 மாதங்களுக்கு ஒர் முறை கொடுப்பது என்றும் இதனால் மொத்தம் 4X15=60 குடும்பங்கள் தற்சமயம் பயன்பெறும்.
இதன் பொறுப்பினை ஜனாப் கோஸ் அன்வர்தீன் அவர்கள் மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இந்த உதவித் தொகையினை ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வேலையினை திட்டமிட்டப்படி வெற்றிகரமாக ஆரம்பிப்பதற்கு அல்லாஹ் முழு உதவி செய்வானாக.
ஆமீன்!
.
உலகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.
மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.
உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6738839077 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
