அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

லகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.

மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.

உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6738839077 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Image and video hosting by TinyPic

Wednesday, April 29, 2009

அன்பான ஓர் வேண்டுகோள்!

அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்!

நண்பர்களே, உறவினர்களே, மற்ற நாடுகளில் எப்படி என்பது எனக்குத்தெரியாது, ஆனால் புரூனேயில் வாழும் எங்களுக்கு வேலை நேரம் எவ்வளவு தெரியுமா? 12 முதல் 14 மணி நேரம். உற்ற உறவினர்களை மட்டுமே தொடர்பு கொண்டு மற்ற நண்பர்களை தொடர்புக் கொள்ள முடியாதபோதுதான் இந்த Chat Box மிக்க உதவியாக உள்ளது. எங்கோ இருக்கும் என் இனிய நண்பர்கள் (Classic Friends) Akbar Bashaவும், Classic Maideen அண்ணணும் இதன் மூலம்தான் ஒரு ஹலோ சொல்லிக்கொள்ள முடிந்தது.

ஊரில் இருக்கும்போது சிறு வயதில் பெரியப் பள்ளியில் சங்கு சத்தம் கேட்டால் கையில் சிலேட்டைக் கொடுத்து மெளத்தை எழுதி வருமாறு என் பெற்றோர்கள் பழக்கிய பழக்கம் இன்றும் சங்கு சத்தம் கேட்டால் என்ன வேலையாக இருந்தாலும் டிவியில் மெளத்தை தெரிந்துக் கொண்டுதான் மறுவேலையைப் பார்ப்பேன். இப்போது வெளிநாட்டில் இருக்கும்போது முக்கிய உறவினர்களின் மெளத்து செய்திகளைக்கூட (உதாரணம் தி.மு.நிஜாம் அண்ணண் அவர்கள்) தெரிந்துக் கொள்ள முடியாமல் நாங்கள் பட்ட கஷ்டம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும். இந்த விஷயத்தில் எனக்கு முக்கியமாக உதவியது Keo Online

மற்ற ஊர் ஜமாஅத்களுக்கும், நமதூர் ஜமாஅத்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்ன தெரியுமா? மற்ற ஊர்களிலெல்லாம் அந்தந்த ஊர் ஜமாஅத் மட்டும்தான் கூத்தாநல்லூரில் மட்டும்தான் ஊரின் உறவுமுறை ஜமாஅத். காரணம் நாம் எல்லோருமே உறவினர்கள்தான். எவ்வழியிலாவது ஒரு உறவு நமக்குள் இருக்கும். Rafeeq Mohamed. P.A. அவர்களோ அல்லது Yaseer - DXB யோ எனக்குக்கூட சொந்தமாக இருக்கலாம் இல்லையா?

என்னுடைய வேண்டுகோள், தயவுசெய்து இந்த தளத்தில் யாருடைய மனதும் புண்படும்படி ஒரு விவாதமேடையாக்க வேண்டாம். இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் (ஒரு சர்வேபடி) ஜாதிய கட்சிக்களால்தான் நாட்டின் அரசியலையே நிர்மாணிக்க முடியுமாம். ஆனால் பெருமளவு மக்கள் தொகைக்கொண்ட சிறுபான்மையான முஸ்லிம் மக்களால் நமக்குள் இருக்கும் ஈகோவினால்தான் நமக்கு ஏகப்பட்ட பிரச்னைகளே.

ஷவ்கத் அலித் தெருவில் வறுமைக் காரணமாக பெற்ற பிள்ளையையே கொலை செய்யப்பட்டதாம். நாம் என்ன செய்கிறோம் இங்கு? லேட்டஸ்ட் மொபைல் போனுக்கும், லேப்டாப்பும் இந்த மாதம் வாங்குவோமா? அல்லது அடுத்த மாதம் வாங்கிக்கொள்ளலாமா? என்று யோசிக்கிறோம் அல்லவா?

நமக்குள் பிரச்னை வேண்டாம், நான் சொன்னதற்க்காக கோபப்படவும் வேண்டாம். ஒற்றுமையாக நமதூரின் மேலாண்மைக்கு பாடுபடுவோம். யாராயிருந்தாலும் சரி, நிச்சயம் நீங்கள் எனக்கு அண்ணண் தம்பியாகவோ அல்லது மாமன் மச்சானாகவோத்தான் இருப்பீர்கள். அதனால் உறவுகளின் நிமித்தம் உரிமையோடு கேட்கிறேன். சரியா?

என்றும் அன்புடன்,
ஜாஃபர்.